மார்ச் 07: காதல் முறிவு அறிவித்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொள்ளும் ஷூட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சிம்பு “ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை,” என அறிக்கை விட்டார்.
ஹனிசிகாவுக்கும் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதும் இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றார்கள். இதற்கிடையில் காதல் முறிவுக்கு பின் சிம்புவும் ஹன்சிகாவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளன. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாதில் நடக்கிறது. இதில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். காதல் முறிந்தாலும் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சிம்பு கூறியது நினைவிருக்கலாம்.
![]()

