மார்ச் 10 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
கெஜ்ரிவால் முன்பு கவனம் செலுத்திய உண்மையான பிரச்சனைகளில் தற்போது கவனம் செலுத்துவது இல்லை. அவர் ஒரு பொய்யர். அவர் பல பொய்களை கூறி வருகிறார். முதலில் ஊழல், வகுப்புவாதம், பரம்பரை அரசியல், சாதி அடிப்படையிலான அரசியல் ஆகிய பிரச்சனைகளில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தினார். ஆனால் தற்போது அவர் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை என்று கோஷமிட்டார். இதை பார்த்த கெஜ்ரிவால் உங்களுக்கு லோக்சபா தேர்தலில் டிக்கெட் தர மாட்டேன் என்று தெரிவித்தார். அஷ்வினி கெஜ்ரிவாலிடம் 11 கேள்விகள் கேட்டார். அதற்கான பதில் கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
![]()

