minister-sellur-raju

மார்ச் 11, மதுரை: “அ.தி.மு.க., காணாமல் போகும் எனக் கூறிய அழகிரி இப்போது கட்சியிலேயே இல்லை,” என, அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பயனடைந்த 50 சதவிகிதம் பேர் ஓட்டுப் போட்டாலும் அ.தி.மு.க., எளிதில் வெற்றி பெறும். 2011க்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது; காணாமல் போய்விடும் எனக் கூறிய அழகிரி, இப்போது கட்சியிலேயே இல்லை. லோக்சபா தேர்தலுக்கு பின் தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

மக்களிடம் மட்டும் கூட்டணி என்று கூறி, அ.தி.மு.க.,வால், வளர்ச்சியடைந்த பின், சில கட்சிகள் தம்பட்டம் அடித்து கொண்டுள்ளன. அவற்றை போல் இனியும் யாரையும் வளர்த்து விடக்கூடாது என்று தான், இம்முறை மக்களுடன் ஜெ., கூட்டணி வைத்துள்ளார், என்றார். வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், தேர்தல் குழு உறுப்பினர்கள் மேயர் ராஜன் செல்லப்பா, பாண்டியன், டில்லி பிரதிநிதி ஜக்கையன் உட்பட பலர் பேசினர்.’

அமைதிப்படை’ அமாவாசை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் குறித்து அமைச்சர் ஒருமுறை குறிப்படும்போது, ‘வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அவரை பார்க்கும் போதும், அவரது செயல்பாடும் ‘அமைதிப்படை’ அமாவாசை போல் உள்ளது’ என ‘ஜாலியாக’ குறிப்பிட்டார். நிர்வாகி ஒருவர் பேசும்போது, “சிவப்பா இருக்கவுங்க பொய் சொல்ல மாட்டாங்க. எனவே நம்ம வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்க,” என்றார். அப்போது, செல்லுார் ராஜூ உட்பட ‘கருப்பு கலர்’ நிர்வாகிகள் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., சுந்தரராஜன் ஏற்பாட்டில், தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, 28ம் தேதி, மதுரையில் ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைய உள்ள நிர்வாகிகள், கூட்டத்தில் அமைச்சருக்கு சால்வை அணிய வந்தனர். அப்போது, “முதல்வரை சந்திப்பதற்கு முன் சால்வை வேண்டாம். பத்திரிகையில் எழுதி விடுவார்கள்,” எனக் கூறி, அதை மறுத்துவிட்டார்.

Loading