மார்ச் 13, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா – உல்–ஹக்கின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆனால் அவரது கேப்டன்ஷிப் தான் கேள்வி நிலையில் இருக்கிறது. கேப்டன் பதவியில் அவரது செயல்பாடு சரியில்லை.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அவர் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தது சரியான முடிவு இல்லை. ஏனென்றால் அந்தப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் 2–வது பேட்டிங் செய்து சிறப்பான வெற்றியை பெற்று இருந்தது.
2015 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணிக்கு ஆக்ரோஷம் மற்றும் புத்தசாலிதனமான கேப்டன் தேவை. இதனால் உலக கோப்பை போட்டிக்கு அப்ரிடி அணிக்கு ஆக்ரோஷம் மற்றும் புத்திசாலி தனமான கேப்டன் தேவை. இதனால் உலக கோப்பை போட்டிக்கு அப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
வங்காளதேசத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
![]()

