AAP government loses majority, Independent MLA withdraws support

மார்ச் 26, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் நேற்று வாரணாசி சென்று கங்கையில் குளித்துவிட்டு, காசி விசுவநாதரை வழிபட்டார். பிறகு அவர் வாரணாசியில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் மோடிக்கு சவால் விட்டார். அவர் கூறியதாவது:–

நரேந்திரமோடி பாதுகாப்பான தொகுதியாக இந்த தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்கவே நான் இங்கு போட்டியிடுகிறேன். குஜராத்தை மோடி முன்னேற்றி விட்டதாக கூறி வருகிறார் அதில் உண்மை இல்லை.

இது பற்றி விவாதிகக் நான் தயாராக உள்ளேன். இந்த விஷயத்தில் மோடிக்கு நான் சவால் விடுகிறேன்.

அவர் இங்கு வந்து இந்த மண்ணில் நின்று என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்த சவாலை ஏற்று அவர் விவாதம் நடத்த முன்வராவிட்டால் ஏதோ தவறு நடந்துள்ளது என்றுதான் அர்த்தமாகும்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Loading