மார்ச் 26, டெல்லி,மார்ச்.26 (டி.என்.எஸ்) உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் குறித்து சிபிஐ விசாரண நடத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முசாபர்நகர் கலவரம் குறித்து நடைபெற்ற வழக்கில், முசாபர்நகர் கலவரத்துக்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம். முசாபர்நகர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
அந்த கலவரம் குறித்து மாநில விசாரணை ஆணையமோ, சிபிஐயோ விசாரணை நடத்த அவசியமில்லை. கலவரத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும், அவர்களது அரசியல் தலையீடுகளை தவிர்த்துவிட்டு கைது செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் வரை மாநில அரசு உரிய காவல்துறை பாதுகாப்பினை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
![]()

