கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கை வேண்டாம் – உச்சநீதிமன்றம்

virat-kohli

மார்ச் 29, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராடும் போராட்டக்காரர்களில், 3 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால், தேர்தல் முடியும் வரை அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என கோரப்படுவது கருத்தில் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் பல போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பபெறக் கோரி தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கில் தமிழக அரசு விரைவில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும் என அவர்கள் தரப்பில் வழக்கில் ஆஜாரகிய வழக்கறிஞர் சுப்ரமணியம் பிரசாத் உறுதியளித்தார்.
அதனால் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெறத் தேவையில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

போராட்டக்காரர்களில் உதயகுமார் உட்பட 3 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால், தேர்தல் முடியும் வரை அவர்களை கைது செய்யக்கூடாது என அவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வெள்ளியன்றைய விசாரணையில் கோரினார்.

அப்போது இந்த வாதம் கருத்தில் கொள்ளப்படும் எனக்கூறிய அந்த அமர்வு இதன் மீதான அடுத்தக்கட்ட விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு