செஞ்சி ராமச்சந்திரனுக்கு இது எத்தனையாவது கட்சித்தாவல்!?

செஞ்சி 11.04.2014 வெள்ளி.

senji-ramachandran

இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டியுள்ள நிலையில் நமது தமிழகத்திலும் பரபரப்பு சூழ்நிலைக்கு குறைவில்லை.

இந்த பரபரப்பில் கட்சித் தாவல்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. அந்த வகையில் செஞ்சியார் என அழைக்கப்படும் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணையப் போவதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக வரும் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை செஞ்சியில் நடத்த இருப்பதாக அவரது ஆதரவாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

செஞ்சி ராமச்சந்திரனை அதிமுகவில் இணைக்க ஆரணி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. திமுகவில் கனிமொழி சிபாரிசின் பேரில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சீட்டு கேட்டு செஞ்சி ராமச்சந்திரன் மனு செய்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டதால் திமுகவை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளாராம்.

மேலும் எல்.கணேசனுக்கு திமுகவில் இருக்கும் மரியாதை செஞ்சி ராமச்சந்திரனுக்கு கிடைப்பதில்லையாம். மு.க.ஸ்டாலின், க.பொன்முடி போன்றோர் செஞ்சி ராமச்சந்திரனை வேண்டா வெறுப்பாகவே பார்க்கின்றனராம்.

கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுகவின் செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலராக வலம் வந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டபோது, திமுகவில் இருந்து வெளியேறி மதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. இனியும் திமுகவில் நீடித்தால் மரியாதை இல்லை என இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு