சட்டசபையில் அவை நாகரீகம் இல்லை என ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

ramadoss

ஜூலை 26, தமிழக சட்டப்பேரவையில், அவை நாகரீகம் மீறப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அதில், ஒருகாலத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதக்களமாக திகழ்ந்த சட்டமன்றம், இப்போது பல நேரங்களில் துதிபாடும் மன்றமாகவும், சில நேரங்களில் வசவுக்களமாகவும் மாறியிருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் காயிதே மில்லத்தும், அண்ணா முதல்வராக இருந்தபோது கருத்திருமன், வினாயகம் போன்றவர்களும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காலத்தில் பேரவையில் நடந்த விவாதங்கள் வரலாற்றில் இடம் பிடித்தவை ஆகும். ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வினாயகம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், ‘இன்னும் எத்தனை வினாக்கள் தான் கேட்பீர்கள்?’ என்று கேட்டனர். அப்போது புன்னகையுடன் குறுக்கிட்ட முதலமைச்சர் அண்ணா, “ அவர் கேட்கட்டும், இன்னும் கேட்கட்டும், அவர் பெயரிலேயே வினா இருப்பதால் அப்படித்தான் கேட்பார்” என்று கூறினார்.

இதனால் அவையில் நிலவிய பதற்றம் தணிந்து சிரிப்பலை எழுந்தது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மதிப்பளித்து அவை நாகரீகத்தைக் காப்பாற்றினர் என்பதற்கு இத்தகைய சம்பவங்கள் உதாரணமாகும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு