வருமான வரி சோதனையை? இல்லை மிரட்டலா?

வருமான வரி சோதனையை? இல்லை மிரட்டலா?

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகியவை டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்தநிலையில், இன்று காலை ஆறு மணி முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயாடிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

வருமானத்தை முறையாக காண்பிக்கவில்லை மற்றும் வருமான வரி சரியாக கட்டவில்லை என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, ஜெயாடிவிக்கு தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான கடைசி கட்ட விசாரணை பெற்றது. அதேப்போல, டி.டி.வி.தினகரன் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்திருந்தார். இத்தகைய சூழலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

சோதனை நடைபெறும் இடங்கள்

  1. சென்னை,ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் சோதனை
  2. ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் சோதனை
  3. நமது எம்ஜிஆர் கிருஷ்ணபிரியா வீடு
  4. மன்னார்குடி சசிகலா உறவினர்கள் வீட்டில் சோதனை
  5. திருவாரூர்,கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டில் சோதனை
  6. அதிமுகவின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தியின் வீட்டில் சோதனை
  7. மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் சோதனை

வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்குகளில் 7 வருமான வரி துறை அதிகாரிகள் காலை ஏழு மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பீனிக்ஸ் லக்ஸ் திரையரங்கில் காட்சிகள் ரத்து. 11 ஸ்கிரின்கள் உள்ளது.

பெங்களூர்

அதிமுகவின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தியின் வாகனத்தின் உள்ளேயும் வருமான வரித்துறை சோதனை.

காலை முதல் வீட்டில் சோதனை நடைபெற்று வந்த சூழலில் தற்பொழுது வீட்டின் வெளியில் இருந்த காரை சோதனை செய்து வருகின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு