சென்னையில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டம் தொடங்கியது

bjp-convention-chennai

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையைச் சுற்றிலும் ஏழடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் குஜராத் போலீசார் உட்பட 8000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கிண்டி, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களை சோதனை செய்த பின்னரே காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தைச் சுற்றிலும் 5 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு