கண்கலங்கிய பிரதமர் ! கவலையில் நாடளுமன்றம்!

My heart bleeds over what is happening in the House: Manmohan Singh
மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த பின்னணியில் சில எம்பிக்களிடம் பேசிய பிரதமர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது தனது இதயத்தில் இருந்து ரத்தம் கசிவதாக தெரிவித்தார். அமைதி காக்கும்படி பலமுறை கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு துன்பகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமையவிருக்கும் மக்களவைகளுக்கு இது போன்ற சம்பவங்கள் மோசமான முன் உதாரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை என்பது எல்லா உறுப்பினர்களுக்கும் சொந்தமானது என்றும் அதன் கண்ணியத்தை காப்பாற்றுவது அனைவரின் கடமை என்றும் அவர் கூறினார்

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு