ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 ரயில்கள்!

10 new trains proposed for Tamil Nadu in Railway Budget 2013-14

இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் கட்டண அடிப்படையில், அசாம் மாநிலம் காமாக்யா – சென்னை இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர ஏ.சி.ப்ரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருவனந்தபுரம் – பெங்களூரு இடையேயான வாரமிருமுறை ஏ.சி.ப்ரீமியம் ரயில் ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும். ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை வழியாக சென்னை – பெங்களூரு தினசரி விரைவு ரயில்சேவை அறிமுகமாக உள்ளது.

காட்பாடி வழியாக ஹவுரா – யஷ்வந்த்புர் இடையே வாராந்திர விரைவு ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஜெய்ப்பூர் வழியாகவும், மும்பையிலிருந்து சென்னைக்கு புனே, குல்பர்கா வழியாகவும் வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கரூர், நாமக்கல்,சேலம் வழியே நாகர்கோவிலிருந்து ஆந்திர மாநிலம் கச்சேகுடாவுக்கு வாராந்திர விரைவு ரயில்சேவை அறிமுகமாக உள்ளது. கேரள மாநிலம் புனலூரிலிருந்து கன்னியாகுமரிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோன்று, மன்னார்குடியிலிருந்து மானாமதுரைக்கும் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கும் தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரி – திண்டிவனம் விரிவு வரையிலான ரயில்வழிப்பாதையை புதுச்சேரி வரை நீட்டிப்பது குறித்தும், சேலம் – ஓமலூர் இடையேயான பாதையை இருவழிப்பாதையாக்குவது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு