டெல்லியில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

Delhi to come under President's Rule

பிப்.16 – டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து, அவர் கேட்டுக் கொண்டது போல், ஆட்சியைக் கலைக்க மறுத்த துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபி ஆட்சிக்கும் பரிந்துரைத்திருந்தார். எனவே டெல்லியின் அரசியல் எதிர்காலம் குறித்து விவாதிக்க, மத்திய அமைச்சரவைக் கூடியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து, இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின் படி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.

ஆட்சியைக் கலைக்க நஜீப் ஜங் மறுத்துள்ளதால், பெரும்பான்மை ஆதரவு பெறும் எந்த கட்சியும் ஆட்சியமைக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க மறுத்ததால் தான் ஜனாதிபதி ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துரைத்திருந்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு