Month: July 2014

‘சொர்க்கம் என் கையில்’ தடை நீங்கி திரைக்கு வருமா?

‘சொர்க்கம் என் கையில்’ என்ற படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இந்து தர்மா சக்தி அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “சொர்க்கம் என் கையில்’…

விடுதலைப் புலிகள் பற்றிய விளக்கப் படம்!

‘ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதோடு இசையமைப்பாளரும் அவரே. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக 9ம் வகுப்பு மாணவன் சத்யா வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் பிரவீன்காந்தும் ஒரு…

சட்டசபையில் அவை நாகரீகம் இல்லை என ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

ஜூலை 26, தமிழக சட்டப்பேரவையில், அவை நாகரீகம் மீறப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அதில், ஒருகாலத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதக்களமாக திகழ்ந்த சட்டமன்றம், இப்போது பல நேரங்களில் துதிபாடும் மன்றமாகவும், சில நேரங்களில் வசவுக்களமாகவும் மாறியிருக்கிறது.…

எதிர்க்கட்சி இல்லாத மத்திய அரசு! குமுறும் காங்கிரஸ்! மறுக்கும் விதிகள்! ஒரு அலசல் ரிப்போர்ட் !

ஜூலை 26, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் 10 சதவீத தொகுதிகளை அதாவது 55 தொகுதிகளை…

அம்மா (ஜெ) பிள்ளை தனபால்!

ஜூலை 26, தமிழகத்தை சுனாமி தாக்கியபோது திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் ஓடி ஒளிந்ததாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 22 ஆம் தேதியன்று பேரவையில் விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் கடும் அமளியில்…

கோயில் தொடர்பான கலவரப் பதட்டம் – உ.பி.யில் ஆகஸ்ட் 4 வரை 144!

ஜூலை 26, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், காண்ட் பகுதியில் கோயில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அகற்றப்பட்டதை எதிர்த்து பாஜகவினர், கடந்த ஜூலை 4ம் தேதி மகாபஞ்சாயத் எனும் சமுதாய பஞ்சாயத்து கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதை போலீஸார்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

ஜூலை 26, தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரை போன்ற நீர்நிலைகள் அருகில் அதாவது கங்கை தேவியை சாட்சியாக வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து…

மேட்டூர் நீர்மட்டம் 72 அடியாக உயர்வு!

ஜூலை26, காவிரி பாசன மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 72 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 33.60 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 36,772 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில்…

வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் தந்தையுமாக அஜித்!

ஜூலை21, தமிழகத்தின் மாஸ் குறையாத நடிகர் அஜித்துடன் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால்,…

வாரந்தோறும் புதிய இசை ஆல்பம் வெளியிட ஆசை! இசைஞானி இளையராஜா பேச்சு!

ஜூலை 21, இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கத்தில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா…

நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்-24ல் நிக்காஹ்!

ஜூலை 21, மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் வரும் ஆகஸ்ட்-21ம் திருவனந்தபுரத்தில் உள்ள அல் சாஜ் கன்வென்சென் செண்டரில்…

சென்னை ஏர்போர்ட்டில் 60 வயது பெண் கடத்தி வந்த 2 1/2 கிலோ தங்கம்!

ஜூலை21, இன்று அதிகாலை மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது…