டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

jayalalitha

இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன.

நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை இவ்வாறு மாதந்தோறும் உயர்த்துவது, ஏழை எளிய மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவது ஆகும். இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா என்று பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த கொடூரச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு