சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் – காவல்துறையினர் இடையே வாக்குவாதம்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் அழுது கொண்டே செல்கின்றனர்…
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்.
தமிழக தலைமைச் செயலாளருடன், மத்திய உள்துறை அலுவலக அதிகாரிகள் பேச்சு; தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளதால் பாதுகாப்பு குறித்து பேசியதாக தகவல்.
சென்னை ராஜாஜி ஹால் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன் கூடுதலாக போலீசார் குவிப்பு!
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடனான திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் சந்திப்பு நிறைவு.
அழகிரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவாக உள்ள நிலையில் சந்திப்பு.
காவேரி மருத்துவமனைக்கு நடிகர் வடிவேலு வருகை..
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
கருணாநிதியின் உடல்நிலை கவலை அளிக்கிறது, உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் – தினகரன்
சென்னையில் காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை! அனைத்து காவல் நிலையங்களிலும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்கள் பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தல்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை அறிய காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அர்ஜூன் வருகை..
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்?
திமுக தலைவர் கருணாநிதி முழுமையாக நலம் பெற்று மீண்டு வருவார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு உதயநிதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகை…
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் வருகை…
திமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வைகோ வருகை…
காவேரி மருத்துவமனையை சுற்றிலும் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிப்பு.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை டி.வி யில் பார்த்த அதிர்ச்சியில் திமுக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு.
கருணாநிதி உடல்நலன் பெறவேண்டி கையில் வேலோடு கொல்லிமலை சித்தர் மர்மயோகி காவேரி மருத்துவமனை வருகை…
கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை..
காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, செல்வி, ஆ.ராசா வருகை..
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை
திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வர வேண்டும் – நாஞ்சில் சம்பத்
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவார் – வைகைச்செல்வன்
சென்னை காவேரி மருத்துவமனை முன் கூடுதலாக போலீஸ் குவிப்பு.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு – ஆனந்த ராஜ் கருத்து
திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கவலை அளிக்கிறது. கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் – திருமாவளவன்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது – குஷ்பு
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வருகை…
மீண்டும் காவிரி மருத்துவமனைக்கு வந்தார் கனிமொழி.
சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆனையர்களுடன் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை…
“திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” – காவேரி மருத்துவமனையில் திமுக வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி
கனிமொழி குடும்பத்தினருடன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழரசு குடும்பத்தினருடன் மருத்துவமனையிலிருந்து கிளம்பினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.
கருணாநிதியின் உடல் நிலை குறித்து நிதின் கட்கரி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
சென்னை காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம்…
திமுக தலைவர் கருணாநிதி பிறவியிலேயே போராளி, பின்னடைவில் இருந்து மீண்டு வருவார் – கே பாலகிருஷ்ணன் நம்பிக்கை.
திமுக தலைவர் கருணாநிதி குணமடைய பிரார்த்திக்கிறேன் – பாரிவேந்தர்
காவேரி மருத்துவமனைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் வருகை!
திமுக தலைவர் மு.கருணாநிதியின் குடும்பக் கிளை..!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் சென்னை புறப்பட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை புறப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்த அறிக்கை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது – தமிழிசை சௌந்தரராஜன்
திமுக தலைவர் கருணாநிதி மனவலிமை உள்ளவர், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவார் – ஜி.ராமகிருஷ்ணன்
காவேரி மருத்துவமனை முன் ஒருபக்க சாலை அடைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது…!
டெல்லியில் இருந்து திமுக எம்பிக்கள் சென்னை திரும்புகின்றனர்…
மத்திய அமைச்சர் நிதின்கட்காரியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் வருகை தருகிறார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காவேரி மருத்துவமனைக்கு வருகை.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமாகா தலைவர் வாசன்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வருகின்றனர்.
காவேரி மருத்துவமனையின் முன்பு குவிக்கப்படும் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தோம். அவர் உடல்நிலை பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம் – எல்.கே.சுதீஷ்
காவேரி மருத்துவமனைக்கு முத்தரசன், கி.வீரமணி வருகை
காவேரி மருத்துவமனைக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வருகை.
கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு பாடலாசிரியர் வைரமுத்து வருகை.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு முன்பாக குவிந்த தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா’ என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
அடுத்த 24 மணி நேரம் கருணாநிதியின் ஒத்துழைப்பை பொறுத்தே உடல்நிலையை கணிக்க முடியும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
![]()







