மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

மைதானத்தில் செருப்பு வீச்சு! போட்டி நிறுத்தம்!

ஐபிஎல் 2018 : சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் நாம்தமிழர் கட்சியினர் காலணிகளை வீசியதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தம்!

ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்து பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் போல் வந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்கள் காலணி மற்றும் மேலாடையை கழட்டி வீசினர். இதனால் 2 நிமிடம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீச்சு.

காலணி வீச்சு தொடர்பாக 2 பேரும், காவிரி விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பியதாக 3 பேரும் என மொத்தம் 5 பேர் கைது.

#chennaisuperkings #CSK #IPL #IPL2018 #CSKvKKR #KKRvCSK #ProtestAganistIPL #CauveryWaterManagement

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு