இறவா சூரியனுக்கு புகழஞ்சலி..!

இறவா சூரியனுக்கு புகழஞ்சலி..!

கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு – சோனியா காந்தி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன்கள் தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் அஞ்சலி.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் – உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்!

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் ராகுல்காந்தி.

திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் இட ஒதுக்கீட்டிற்காக போராடிய திமுக தலைவர் கருணாநிதிக்கு மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றி – ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நேரில் அஞ்சலி.

திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான 4 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஆட்சேபனை இல்லை என டிராஃபிக் ராமசாமி மனுத் தாக்கல்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதை எதிர்த்த அனைத்து வழக்குகளும் வாபஸ்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் மல்க அஞ்சலி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரபு, சகோதரர் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி..

மறைந்த கருணாநிதி உடலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி..

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், மனைவி ஷாலினி நேரில் அஞ்சலி செலுத்தினர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கண்ணீருடன் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி..

ஆட்சியை ஒருபோதும் காட்சியாக ஆக்கிக் கொண்டவர் அல்ல கருணாநிதி  – கி. வீரமணி.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினர்

கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அஞ்சலி.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மேல் மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் லதா ஆகியோர் அவருடன் வந்திருந்தனர்.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதே போன்று நடிகர் ராதாரவியும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கருணாநிதி நேற்று உடல் நல குறைபாடு காரணமாக காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லங்களில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ஓமந்தூரார் எஸ்டேட் அருகில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு