I give power to people: Rahul Gandhi in Assam

பிப்ரவரி 27: பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி  கேள்வியெழுப்பியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் ராகுல் காந்தி புதன்கிழமை கலந்துரையாடினார். அவர் பேசியவதாவது:

இந்தியா வல்லரசு நாடு என்று பெரிதாக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன்பாக பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா?’ என்று மாணவிகளைப் பார்த்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

“பேருந்தில் பயணம் செய்யும்போதும், வீதியில் நடந்து செல்லும்போதும் நீங்கள் பாதுகாப்பை உணர்கிறீர்களா? நீங்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறீர்களா? இளம்பெண் ஒருவர் பேருந்தில் செல்ல அச்சப்படும்போது, நாம் இந்தியாவை வல்லரசு நாடு என்று எப்படி அழைக்க முடியும்?’ என்றும் அவர் வினா எழுப்பினார்.

Loading