இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

narendra-modi

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள தானியங்களை ஏழைகளுக்கு தராமல் சாராய ஆலைகளுக்கு தருகிறது. கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தும் காங்கிரஸ் அரசு செயல்படுத்த வில்லை.

சி.பி.ஐ. அமைப்பை அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் அரசு. ஆளுநர் மாளிகைகள் காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுகிறது.

மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்ந்திருக்காது. தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்க மத்தியில் உள்ள பலவீனமான ஆட்சியே காரணம்.

மேலும் அவர் பேசுகையில் இன்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசி இருக்கிறார். அவர் குஜராத் மாநிலத்தை அவமானம் படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். கெட்டவார்த்த்தையில் பேசியிருக்கிறார். ஏமாளி முட்டாள் என்று வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் குஜராத் மக்கள் நன்கு உங்களை புரிந்து வைத்து உள்ளார். யாரையும் ஏமாற்ற முடியாது.

அதே போல் பாரத தேசமும் புரிந்து வைத்து உள்ளனர். உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். உங்களால் ஏமாற்ற முடியாது என்பதை பாரத தேச மக்கள் நிரூபித்து காட்டுவார்கள்.

மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி தேர்தலில் தோற்று போனார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்துவிட்டார். ரீ கவுண்ட்டிங் மினிஸ்டர் அவர் தான் புத்திசாலி என்று நினைத்து இருக்கிறார்.

மோடிக்கு பொருளாதார அறிவை போஸ்ட் ஸ்டாம்புக்கு பின்னால் எழுதிவிடலாம் என்று சொல்லி இருக்கிறார். ஸ்டாம் ஒட்டினால் தான் கடிதம் போய் சேரும். நான் நிரூபித்து காட்டியிருக்கிறேன் அவரை விட புத்திசாலி என்று. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தது ஜெயிக்காது ஹாட்வொர்க்கிங்தான் ஜெயிக்கும் ’ என்று பேசினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு