இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. முடிவு

400 youth enrol as BJP 'campus ambassadors'

புது டெல்லி, பிப்.12 – 2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 433 இடங்களில் போட்டியிட்டும் 116 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. புது முகங்களுக்கு கொடுக்காமல் வயதான பழைய எம்.பி்க்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததால்தான் பா.ஜ.க. அதிக வெற்றியை பெற முடியவில்லை என்று அப்போது விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் புது முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் பா.ஜ.க. அதிக முன்னுரிமை கொடுத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி 163 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் புதுமுகங்கள். 30 பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். மத்திய பிரதேச மாநிலத்திலும் இதே நிலை காணப்பட்டது.

இதையடுத்து வரும் பாராளுமன்ற தேற்தலிலும் அதிகப்படியான புதுமுகங்களையும், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் களம் இறக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். பா.ஜ.க.வின் மொத்த வெட்பாளர்களில் 65 முதல் 85 பேர் வரை இளைஞர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் அனேகமாக வரும் 21-ந் தேதி பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு ஆய்வுப் பணி தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதும் முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட திட்டமிட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு