ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

N-Srinivasan

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக (சேர்மன்) தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் ஐ.சி.சி.யின் மறு சீரமைப்புக்கு ஒப்புதல் பெறப்பட்டது. 8 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. இலங்கை, பாகிஸ்தான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன.

மறு சீரமைப்பு ஒப்புதல் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெறுகிறது. மேலும் இந்த 3 நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.சி.சி.யின் நிதியை அதிகமாக பெறும்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு