மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் – பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்

Congress

மார்ச் 29, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இவருடைய உரையினால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத்தான் என்பவரே மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

‘நான் இந்த வீதியை சேர்ந்தவன். என்னுடைய மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன். நான் சாவதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ அஞ்சவில்லை. அவர் ( மோடி ) இது குஜராத் என நினைத்துக்கொள்கிறார். குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இங்கே (உத்தரபிரதேசம்) 42 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்” என்றார்.

அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியது. இம்ரானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது மேலும் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது இந்த பேச்சு குறித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இம்ரான், 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கோரினால் மட்டுமே எனது பேச்சுக்காக நான் மன்னிப்புக் கோருவேன் என்று தெரிவித்தார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு