Rahul kissed girl burned to death in Assam campaign

மார்ச். 1 : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார்.

அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை எரித்து கொன்று கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

கணவன் தீ வைத்து எரித்தாரா ? இந்நிலையில் போன்டி பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனர். இவரது கணவனும் உடலில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையே தகராறு நடந்ததாகவும், இதில் ஆத்திரமுற்ற பெண் தானாக தீக்குளித்தாரா அல்லது கணவன் தீ வைத்து எரித்து தானும் தற்கொலைக்கு முயன்றாரா என்று உறுதியான தகவல் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் மறுப்பு : ஆனால் ராகுல் சந்திப்பில் இந்த பெண் பங்கேற்கவில்லை என்றும், இறந்த பெண் காங்., கட்சியின் வார்டு உறுப்பினர்தான். ஆனால் இறந்த பெண் ராகுல் நிகழ்ச்சி பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் எஸ்.பி, அம்ஜித்கவுர் கூறியுள்ளார்.

Loading