karunanidhi

சென்னை: 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், இது தொடர்பான உரையாடல் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டிய அவர், கலைஞர் டி.வி. ஆண்டறிக்கையில் கூறப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப, லஞ்சமாக பெறப்பட்ட தொகையை கடனாக பெற்றது போன்று காட்டுவதற்காக ஆவணங்களில் சரத் ரெட்டி திருத்தம் செய்ததாக குற்றம் சாட்டியதோடு, இது தொடர்பாக சரத் ரெட்டிக்கும், அப்போதைய உளவுத்துறை ஐஜியான ஜாபர் சேட்டுக்கும் இடையே 13.02.2011. அன்று நடைபெற்றதாக கூறப்படும் உரையாடல் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்தித்தார். அப்போது, ”2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

தி.மு.க. மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2ஜி ஊழல் வழக்கில் வெளியிடப்பட்ட ஆதாரங்கள், 2ஜி வழக்கிற்கு தொடர்பில்லாதவை. குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் நிரூபிக்க வேண்டும்.

எல்லா அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்துகிறது ஆம் ஆத்மி கட்சி. பொய்யான குற்றச்சாட்டுகள் தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. டெல்லி மாநில அரசின் நிவாக சீர்கேடுகளை மறைக்க பிரசாந்த் பூஷன் முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார்.

செய்தியாளரின் கேள்விக்கு  பதிலளித்த கலைஞர் தேர்தலில் 3வது அணி அமைத்து ஜெயலலிதா பிரதமரானால் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

Loading