jayalalitha first day of parliamentary elections campaign tour

மார்ச் 03: அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை, இன்று, காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதனையொட்டி, அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. அனைத்து மக்‍களுக்‍கும் நன்மைகள் வழங்கும் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்க, கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். “அமைதி, வளமை, வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்துடனும், “நாற்பதும் நமதே” என்ற வெற்றி லட்சியத்துடனும் நாடாளுமன்ற மக்‍களவை தேர்தலுக்‍கான பிரச்சாரத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தொடங்க உள்ளார்.

கடந்த 24-ம் தேதி, நாடாளுமன்ற மக்‍களவை தொகுதி வேட்பாளர்களை முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்தார். மறுநாள், 25ம் தேதியன்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்‍கையை வெளியிட்ட முதலமைச்சர், தமது முதல்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரங்களையும் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இன்று சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்குகிறார்.

முதலமைச்சரை வரவேற்க கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் தயாராக உள்ளனர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமரானால் நாடே வளர்ச்சிபெறும் என மிகுந்த நம்பிக்‍கையுடன் உள்ள பொதுமக்கள், முதலமைச்சருக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍க காத்திருக்‍கின்றனர்.

நத்தப்பேட்டையிலிருந்து பொதுக்‍கூட்டம் நடைபெற உள்ள காஞ்சிபுரம் நகரம் தேரடிப்பகுதி வரை, சாலைகளின் இருமருங்கிலும் கழகக் கொடிகளும், தோரணங்களும், வரவேற்பு வளைவுகளும் அமைக்‍கப்பட்டுள்ளன. முதலமைச்சரை வரவேற்கும் வகையில், பலவண்ண பதாகைகளும் வைக்‍கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. பொதுக்‍கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்‍டர் மைத்ரேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வாலாஜாபாத் பா. கணேசன், திரு. சோமசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பொதுக்‍கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர்கள் திரு. O. பன்னீர்செல்வம், திரு. நத்தம் R. விஸ்வநாதன், திரு. K.P. முனுசாமி, திரு.T.K.M. சின்னையா ஆகியோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், மீனம்பாக்‍கம், ஜெயின் கல்லூரி வளாகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

6-ம் தேதி, நாகப்பட்டினம் தொகுதிக்‍குட்பட்ட நாகப்பட்டினம் அவரித்திடலிலும், மயிலாடுதுறை தொகுதிக்‍குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியம், காலஹஸ்திகாபுரம் ஊராட்சி பகுதியிலும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்‍கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்.

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில், அமைச்சர்கள் திரு. O. பன்னீர்செல்வம், திரு. K.P. முனுசாமி, திரு. R. வைத்திலிங்கம், திரு. R. காமராஜ், திரு. K.A. ஜெயபால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, மார்ச் 9-ம் தேதி கன்னியாகுமரி தொகுதியில், நாகர்கோவில் நாகராஜா திடலிலும், 11ம் தேதி சிதம்பரம் தொகுதிக்‍குட்பட்ட, சிதம்பரம் கீழ வீதியிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சார பொதுக்‍கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

மார்ச் 13-ம் தேதி ஈரோடு தொகுதிக்‍குட்பட்ட சித்தோடு பேரூராட்சி, சித்தோடு நால்ரோடு பகுதியிலும், திருப்பூர் தொகுதிக்‍குட்பட்ட, திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை, அண்ணாநகரிலும் முதலமைச்சர் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வரும் 15-ம் தேதி கள்ளக்‍குறிச்சி தொகுதி சின்னசேலம் ஒன்றியம், உலகங்காத்தான் ஊராட்சி, ஆற்காடு மில் பகுதியில் முதலமைச்சர் உரை நிகழ்த்துகிறார். ராமநாதபுரம் தொகுதியில், ராமநாதபுரம் அரண்மனை முன்பு, வரும் 18-ம் தேதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 19-ம் தேதி திருச்சிராப்பள்ளி தொகுதிக்‍குட்பட்ட திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்‍கூட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உரையாற்றுகிறார்.

21-ம் தேதி விருதுநகர் தொகுதியில் உள்ள சிவகாசி நகரம், சிவகாசி-விருதுநகர் நெடுஞ்சாலை அருகிலும், சிவகங்கை தொகுதி காரைக்‍குடி, மகரநோன்பு கொட்டல் காந்தி திடல் பகுதியிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரி தொகுதிக்‍குட்பட்ட உப்பளம், கடலூர் சாலை, A.F.T. மைதானத்தில், மார்ச் 23-ம் தேதி, தேர்தல் பிரச்சார பொதுக்‍கூட்டத்தில் உரையாற்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 25-ம் தேதி திண்டுக்‍கல் தொகுதிக்‍குட்பட்ட, திண்டுக்‍கல் பழனிரோடு அங்குவிலாஸ் விளையாட்டுத் திடலிலும், தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்துகிறார்.

மார்ச் 28-ம் தேதி வேலூர் தொகுதி அணைக்‍கட்டு ஒன்றியம், இடையன்காடு ஊராட்சி காட்டுக்‍கொல்லை பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆதரவு திரட்டுகிறார். ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்‍குடி தொகுதி, அண்ணா நகர் மெயின்ரோடு பகுதியிலும், ஏப்ரல் 2ம் தேதி, தேனி தொகுதிக்‍குட்பட்ட, தேனி நகரம் பைப்பாஸ் சாலையிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உரையாற்றுகிறார்.

தென்காசி தொகுதிக்‍குட்பட்ட சங்கரன்கோவிலில் உள்ள வடக்‍குமாசி வீதியில், ஏப்ரல் 5-ம் தேதி தேர்தல் பிரச்சாரப் பொதுக்‍கூட்டத்தில் பேருரை நிகழ்த்தி, தமது முதற்கட்ட சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவு செய்கிறார்.

Loading