மார்ச் 10 நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் அழகிரி ஆதரவாளர்கள் நெப்போலியன், ஜே கே ரித்திஷ் போன்றோர் புறக்கனிக்கப்ப்ட்டுள்ளனர். பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விபரம்:
1. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்
2.மத்திய சென்னை- தயாநிதிமாறன்
3. வட சென்னை- கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன்
5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன்
6. சேலம்- உமாராணி
7. நாமக்கல்- காந்தி செல்வன்
8. ஆரணி- ஆர்.சிவானந்தம்
9. தருமபுரி- தாமரைச் செல்வன்
10. திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
11. விழுப்புரம்- முத்தையன்
12. திருப்பூர்- செந்தில்நாதன்
13. நீலகிரி- ஆ.ராசா
14. கோவை- கணேஷ் குமார்
15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி
16. திருச்சி- அன்பழகன்
17. கரூர்- சின்னச்சாமி
18. கடலூர்- நந்தகோபால்
19. தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு
20. மதுரை- வேலுச்சாமி
21. தேனி- பொன்.முத்துராமலிங்கம்
22. விருதுநகர்- ரத்தினவேல்
23. ராமநாதபுரம்- முகமது ஜலீல்
24. ஈரோடு- பவித்திர வள்ளி
25. கன்னியாகுமரி- ராஜரத்னம்
26. காஞ்சிபுரம்- செல்வம்
27. பெரம்பலூர்- பிரபு
28. நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்
29. தூத்துக்குடி- ஜெகன்
30. அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ
31. நெல்லை- தேவதாஸ்
32. திண்டுக்கல்- காந்திராஜன்
33. கிருஷ்ணகிரி- பில்லப்பா
34. சிவகங்கை- துரைராஜ்
35. புதுச்சேரி- நஜீம்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்:
ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். எஸ். பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இந்த வேட்பாளர் பட்டியல் முழுமையானது என்று சொல்லமாட்டேன், திருத்தம் வரலாம். மேலும் திருவள்ளூர், வேலூர், சிதம்பரம், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
திமுக பட்டியலில் மு.க. அழகிரி பெயர் பட்டியலில் இடம் பெறவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது திமுக கூட்டம். தேவையற்றவர்களைப் பற்றிய கேள்விகளை இங்கு கேட்க வேண்டாம் என்று கருணாநிதி கோபத்துடன் பதிலளித்தார்.
![]()

