எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் விரையில் தீர்ப்பு உச்சநீதிமன்றம்!

chennai-high-court

மார்ச் 11, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் அவர்களை தகுதிநீக்கம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய அமர்வு, குற்றச் செயல்கள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை கீழ் நீதிமன்றங்கள் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த வழக்குகளை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அவ்வாறு ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்காவிட்டால், அதற்கான காரணத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கீழ் நீதிமன்ற நீதிபதி விளக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு