gava sri dho

மார்ச் 27, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.

தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸின் பணியாளர். அவர் முத்கல் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்த போது, குருநாத் மெய்யப்பன் ஒரு ஜாலிக்காகத்தான் பெட் கட்டியதாக கூறியிருக்கிறார். ஆனால் முத்கல் கமிட்டியோ குருநாத் மெய்யப்பன் முழு வீச்சில்தான் பிக்ஸிங், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று கூறிகிறது. ஆகையால் கேப்டன் டோணி, குருநாத் மெய்யப்பனைக் காப்பாற்றும் வகையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை முத்கல் கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார், அவருக்கும் இந்த பிக்ஸிங் குற்றத்தில் தொடர்பு இருக்க்கிறது என்று வாதாடினார்.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகாருக்கு ஆளான சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை ஐ.பி.எல்.லில் இருந்து தற்காலிகமாக நீக்கி வையுங்கள் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்தது.

இதுகுறித்த இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நாளை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அல்லது கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை முடியும் வரை இடைக்கால தலைவர் பதவியில் கவாஸ்கர் இருப்பார்.

Loading