
ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார்.
அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். மத்திய மந்திரி சரத்பவார் மீதும் மோடி கடுமையாக தாக்கி பேசினார். மராட்டிய மக்களை விட விளையாட்டுக்குத் தான் சரத்பவார் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் மோடி கூறி இருந்தார். மோடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரத்பவார் இன்று பதிலடி கொடுத்தார். கான்ஸ்வாங்கி நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பயனற்ற குப்பை விஷயங்களைப் பேசி வருகிறார். அவர் சித்தம் கலங்கியவர் போல உள்ளார். அவரை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். இப்போது நடக்கும் தேர்தலை அவர் அடிக்கடி சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார். சுதந்திரப்போராட்ட காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகம் பற்றி அவருக்கு தெரியாது.
சுதந்திரப் போராட்டக்காலத்தில் காங்கிரசின் பங்களிப்பு அளவிடற்கிடையாது. காங்கிரசின் சித்தாந்த்தம்தான் நமக்கு விடுதலை பெற்று தந்தது. இந்த் விஷயமேல்லாம் மோடிக்கு தெரியுமா? குஜராத் கலவரத்தில் சிறுப்பான்மை இன மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை அகமதாபாத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தவர்களை கூட மோடி சென்று பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. அவர்களைப்பற்றி அவர் கவலையும் படவில்லை.
நரேந்திர மோடி மிகவும் ஆபத்தானவர். மராட்டிய மாநிலத்துக்கு வந்த அவர் இங்கு உள்ள விவசாயிகள் நிலை பற்றி ஏதாவது புரிந்து கொண்டு பேசினாரா? இப்படிப்பட்டவர் பிரதமரானால் அது நாட்டுக்கே எதிராக போய் விடும்.
![]()
