பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் பயன்படுத்த கோரிக்கை!

thennai

ஜூலை 19, பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் ஆர். கலியராஜ்.

தஞ்சை மாவட்டம் நெல் பயிருவதை போலவே கணிசமான அளவில் தென்னையும் பயிரிட்டு வருகிறது.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 45,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகள் கொப்பரை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள தென்னை வணிக வளாகம் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு 20-க்கு 20 மீட்டர் அளவுள்ள 12 உலர் களங்கள் உள்ளன. மழை காலத்திலும் தரமான கொப்பரை தயாரிக்க சூரிய ஒளியில் உலர்த்தும் கூடமும் உள்ளது. ஓடு பிரிக்கும் கூடங்கள் 2, விவசாயிகள் பொருள் வைப்பு அறைகள் 10 ஆகியவையும் உள்ளன. இவற்றை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தங்கள் இடுபொருள்களை வைத்து விநியோகிக்க 17 இடு பொருள் கடைகளும் இங்கு உள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் உரிய வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு பயன் பெறலாம். நாளொன்றுக்கு 500 கிலோ அளவில் எண்ணெய் பிழியும் மினி ஆயில் மில் யூனிட் ஒன்றும் ஜெனரேட்டர் வசதியுடன் இவ்வளாகத்தில் உள்ளது.

தென்னை விளைபொருள் குழு உறுப்பினர்களும் தங்கள் குழு மூலம் மதிப்புக் கூட்டுதல் போன்ற வருவாய் ஈட்டும் தொழில்களுக்கு இந்த வணிக வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு