mpdj

ஆக 11, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் வருகிற 22-ந் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை வருகிறார்.

பாராட்டு விழா நடத்துவதற்காக மதுரை ரிங் ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு நிலத்தை சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணியை தொடங்குவதற்கான பூமிபூஜை நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. அப்போது பந்தல்கால் நடப்பட்டது.

Loading