பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
![]()

