Month: March 2018

ஸ்மித்தை நீக்கி, கேப்டனாக ரஹானேவை நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயலஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில்…

நீதிமன்றத் தடையை மீறி சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லியில் திருமணம்!

குடும்ப நல நீதிமன்றத் தடையைமீறி டெல்லியில் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடைபெற்றது. ராமசாமியின் மனைவி சத்யபிரியா, மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கும் ராமசாமிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கும் எனக்கும் 2016-ம் ஆண்டு…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்.! திணறிய போலீசார்..! மீண்டும் ஜல்லிகட்டு போல் போராட்டம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின்…

முன்னாள் நிதி அமைச்சரை பதறவிட்ட காபி டே!

சென்னை விமான நிலையத்தில் டீ ரூ.135க்கும், காபி ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் விலையை கேட்டவுடன் வாங்க மறுத்துவிட்டேன் என முன்னாள் நிதி மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். At Chennai Airport Coffee Day…

ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த சிவகார்த்திகேயன், ரவிக்குமார்

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால்,…

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான நடிகர் என்று கூறலாம். இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதி அடுத்து அருண் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகி…

விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலிப்பது உலகமே அறிந்ததே சமீபத்தில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், திடீரென அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, இனி…

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் அப்டேட்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தனது நண்பரான அருண்ராஜா காமராஜாவை வைத்து ஓர் படத்தினை தயாரிக்கவுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தின் மூலம்…

பெட்ரோல் மற்றும் டீசல் இன்றைய விலை : பெட்ரோல் ரூ.74.98, டீசல் ரூ. 66.44

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.98, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.44 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தலைநகரங்களின் பெட்ரோல், டீசல் விலை விபரம்: சென்னை: எண்ணெய்…

பெட்ரோல் மற்றும் டீசல் இன்றைய விலை : பெட்ரோல் ரூ.74.94, டீசல் ரூ.66.30

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.21 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தலைநகரங்களின் பெட்ரோல், டீசல் விலை விபரம்: சென்னை: எண்ணெய்…

பத்மவிபூஷன் விருது பெற்றார் இளையராஜா!

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார். புதுடெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல்,…

கணவர் நடராஜன் உயிரிழந்ததை அடுத்து சசிகலாவுக்கு பரோல்

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் காலமானார். இதையடுத்து அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச்…