சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார்.
சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 16 ந்தேதி நெஞ்சுவலி காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.35 மணியளவில் காலமானார்.
சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.35 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது நடராஜன் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மன்னார்குடி கொண்டுசென்று இறுதி சடங்கு நடந்தவுடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடராசன் வாழ்க்கை……
அவர் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் விளார் எனும் கிராமத்தில் மருதப்பண்ணையார் என்பவருக்கு 1942 ம் ஆண்டு மகனாய் பிறந்தார். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியானார்.
சசிகலா – நடராஜன் திருமணம்
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் நடராஜனுக்கும் 1970-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. நடராஜனுக்கு ஏ.பி.ஆர்.ஓ வேலை போட்டுக்கொடுத்ததும் கருணாநிதிதான்.
ஜெயலலிதாவுடன் நட்பு
1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன். நடராஜன்.எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.
ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார். பாதுகாப்பு அரண் 1984ல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார்.
புதிய பார்வை
புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது.
இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.
சசிகலா-நடராஜன் பிரிவு
நடராஜன் பிரிவு ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் எங்கோ, எப்போதோ சொன்னதாக தகவல் எட்ட அதுமுதல் நடராஜன் – ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்தது.
கணவரா, தோழியா என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுக்கிறார் சசிகலா. அதுமுதல் கணவன் மனைவி உறவை விட நட்புதான் முக்கியம் என்பதை நிரூபித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.
மேலும் தகவலுக்கு இணைந்திருங்கள்…
![]()

