ஜெ உயிரோடிருந்த வரை எந்தவித இடையூறுமின்றி இரண்டு முறை முதலமைச்சர்
பொறுப்பை வகித்தவர் ஓபிஎஸ். அப்பல்லோவில் ஜெ.வின் இறுதி நாட்களில்
மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சர். இந்த நிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக
விலகிய ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து பிரிந்தார். பல்வேறு கட்ட சம்பவங்களுக்குப் பிறகு பொன்னையன், மதுசூதனன், மைத்ரேயன், அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஆரம்பம் முதலே சசிகலாவை எதிர்த்த கே.பி. முனுசாமி, பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் இவரிடம் தஞ்சம் புகுந்தனர். அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அப்போது முதலமைச்சராக இருந்த இவர் சொல்வது சரியா. விசுவாசம் என்பதை செயலில் காட்டும் ஓபிஎஸ் சசிகலா காலில் விழுந்தது எதற்காக. சரி. தற்போது அவர் சிறை சென்ற பிறகு சசிக்கு முன்னோடியாக தண்டனை பெற்ற ஜெ வை மையப்படுத்திய அரசியல் செய்யும் இவர், முதலமைச்சராக இருக்கும்போது ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக என்ன செய்தார்.

ஜெ மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறும் ஓபிஎஸ், அதற்கு
காரணமானவர்கள் என கைகாட்டும் சசித் தரப்போடு கைகோர்ப்பது எவ்விதத்தில்
நியாயம்.

எது எப்படியோ அண்ணன் சாக திண்ணை காலியான கதையாக தானும் சி எம் என்ற
நிலையில் இருக்கும் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) க்கு கொங்கு பகுதி
எம்எல்ஏக்கள் ஆதரவு. அதைத் தவிர அவர் தன்னிச்சையாக மாநிலத்தை ஆளும்
திறம்படைத்தவர் என்றோ, மக்களின் சேவகன் என்பதோ கூற இயலாத அவரே அறியாத காரியம்.

இதனிடையே, தினகரனை தனது போட்டுக்கொடுக்கும் திறமையால் வளைத்த பாஜக,
தற்போது, தினகரன் தொடர்பான நெடியேறும் பழைய பைல்களை தூசி தட்டி
மிரட்டுகிறது. ஆதாரமில்லை, இருக்கு என்பதற்கிடையில் தினகரன் இனி
அதிமுகவிற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தான
வழக்கில் கைதாகிவிட்டார், ஏற்கனவே இருக்கும் அந்நியச் செலாவணி பெரா
வழக்கில் சிறை செல்லலாம். எல்லாம் மோடி மயம்.

இது இப்படி என்றால், அதிமுகவின் அசைக்க முடியாத தொண்டர்களை ஆளப்போவது யார், அவர்களை கட்டிக்காக்கப்போவது யார், அவர்களை குறி வைத்துதான் பாஜக தனது சாதி அரசியலை அதிமுகவிலிருந்து தொடங்கியுள்ளது.

அதற்கு உதாரணம், முதலமைச்சர் இடத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தைச்
சேர்ந்த ஓபிஎஸ்சையும், கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இபிஎஸ்சையும்
தூண்டி வம்பிலுத்து வருகிறது. ஏற்கனவே நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த
எதற்கும் அஞ்சமாட்டேன் என்று கூறும் ஏர்போர்ட் அடிதடி அக்கா சசிகலா
புஷ்பாவை தனது கையில் வைத்திருக்கிறது. திமுகவிலும் இப்படிச் செய்ய எம்பி
கனிமொழி கையில் இருப்பதாக தகவல். இப்படிச் சாதி அரசியல் திருகுதால
வேளையைச் செய்துவரும் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைப்பது ஆழம் தெரியாமல் படு குழியில் கால் வைப்பதாக திராவிட அரசியல் வாதிகள் கருத்துக்
கூறிவருகின்றனர்

Loading