VA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with va letter.
Total Names: 2,131
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
வேண்மாறன்
(male)
பாண்டிய மன்னன்
-
வேண்மாள்
(female)
பெரிய நற்பண்புள்ள மங்கை
-
வேதகீதன்
(male)
வேதங்களால் பாடப்படுபவன் / சிவபெருமானின் ஞான வடிவத்தையும், இசையுடன் கூடிய இன்ப வடிவத்தையும் ஒருங்கே குறிக்கிறது
-
வேதநாதன்
(male)
அனைத்து வேதங்களுக்கும் உரிமையாளர்
-
வேதன்
(male)
வேத ஞானத்தை உடையவன் / வேதங்களுக்கு முதன்மையானவன்
-
வேதமுதல்வன்
(male)
வேதங்கள் தோன்றுவதற்குக் காரணமானவர்
-
வேதவேதாந்தன்
(male)
வேதங்களின் மூலமாகவும் அதன் முடிவுப் பொருளாகவும் விளங்கும் பரம்பொருள் / வேதங்களின் வடிவமாக திகழ்பவன்
-
வேதேவர்
(male)
வேதங்களின் தலைவர் / வேதங்களால் புகழப்படுபவர்
-
வேனிற்கோ
(male)
இனிமையும் வசந்தமும் நிறைந்த இளவேனில் காலத்தைப் போன்றவர்; அரசனின் சிறப்பைக் கொண்டவர்.
-
வேனிற்செல்வி
(female)
மென்மையான ஒளி கொண்ட செல்வி
-
வேனிலரசன்
(male)
ஒளிமிக்கக் கதிரவன் போன்றவன்
-
வேனிலரசி
(female)
வேனில்-ஒப்பனை, அழகு, பொலிவாய் உள்ள அரசி
-
வேனிலான்
(male)
இளவேனில் காலம் போன்று இனிமையும் வசந்தமும் நிறைந்தவர்.
-
வேனில்
(male)
பொலிவுமிக்கவர்/அழகானவர்.
-
வேனில்வேந்து
(male)
அழகிய வசந்த காலத் தலைவன்
-
வேன்மகள்
(female)
செல்வமும் அறிவும் மிகுந்தவள்
-
வேன்மங்கை
(female)
வலிமையும் நற்குணங்களும் மிகுந்தவள்
-
வேன்மடந்தை
(female)
ஆற்றலும் நற்பண்புகளும் மிகுந்தவள்
-
வேன்முத்து
(male)
முத்தை மிகுதியாகப் பெற்றவர்
-
வேன்மொழி
(male)
சொல்லாற்றல் மிக்கவர்
-
வேப்பந்தாரோன்
(male)
வேம்பு மாலையை உடையவர் /படையை உடையவர்.
-
வேப்பம்மாள்
(female)
வேப்பமரத்தின் நன்மை தரும் அம்மை
-
வேம்பனம்பி
(male)
அனைவராலும் விரும்பப்படும் பாண்டிய மன்னர்
-
வேம்பனாடன்
(male)
வேம்பைச் சின்னமாகக் கொண்ட நாட்டின் அரசர்.
-
வேம்பன்
(male)
நன்மை செய்யும் வலிமையுடையவன்
-
வேம்பன்மணி
(male)
மணி ஒளி போன்ற பாண்டிய மன்னன்
-
வேம்பன்மாறன்
(male)
வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னர்
-
வேம்பன்முடி
(male)
வேம்பைச் சின்னமாகக் கொண்டு ஆட்சி செய்யும் பாண்டியர்.
-
வேம்பன்முத்தன்
(male)
பாண்டிய நாட்டில் விளைந்த முத்திற்கு ஒப்பானவர்
-
வேம்பன்முத்து
(male)
பாண்டிய குலத்தில் பிறந்த மதிப்புமிக்க முத்து போன்றவர்.
-
வேம்பன்முரசு
(male)
பாண்டியனின் போர் முரசம்போன்று சிறப்பு பெற்றவர்
-
வேம்பன்மைந்தன்
(male)
பாண்டிய குலத்தின் தொடர்ச்சியைக் குறிக்கும் சிறந்த மகன்.
-
வேம்பன்வழுதி
(male)
வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டிய மன்னர்
-
வேம்பரசன்
(male)
மருத்துவப் பண்பும் வீரமும் கொண்ட தலைவன்
-
வேம்பரசி
(female)
வேம்பின் தன்மை உடைய அரசி
-
வேம்பரசு
(male)
நிழல் தருவதில் சிறந்து விளங்கும் வேப்பம் ,அரசமரம் போன்று திகழ்பவர்.
-
வேம்பாயி
(female)
வேம்பாய் காக்கும் தாய்
-
வேம்பு
(female)
மரவகை ,"வேம்பின் பைங்கா யென்றோழி தரினே" (குறுந். 196)
-
வேம்புமாலையன்
(male)
வேப்பம்பூ மாலை சூடிய பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
வேயமுது
(male)
மூங்கில் அரிசியில் உருவான அமுதுக்கு ஒப்பானவர்
-
வேயம்மா
(female)
மூங்கில் போன்ற மென்மை கொண்ட தாய்
-
வேயம்மை
(female)
மூங்கில் நிறைந்த மலைக்கு உரியவர்
-
வேயரசி
(female)
மூங்கில் நிறைந்த மலைநாட்டு அரசி
-
வேயழகி
(female)
மூங்கில் போன்று மென்மையும் அழகும் உடையவர்
-
வேயாள்
(female)
மூங்கில் அடர்ந்த மலைக்கு உரியவள்
-
வேயீன்றமுத்தன்
(male)
மூங்கில் ஈன்ற முத்து போன்ற அரிதானவன்/ முத்துப் போன்ற பல்வரிசையுடையவன்
-
வேயுறுதோளி
(female)
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன், திருஞானசம்பந்தர் பாடல்
-
வேயூராள்
(female)
மூங்கில் விளைந்த ஊருக்குரியவள்
-
வேய்ங்குழலி
(female)
புல்லாங்குழல், புல்லாங்குழல் "ஆயர்கள் வேய்ங்குழலோசையும் விடைமணிக் குரலும்" (திவ். திருப்பள்ளியெழுச்சி 4)
-
வேய்த்தோளி
(female)
மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள் கொண்டவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
