இலவச எஸ்.எம்.எஸ் சேவையை கருணாநிதி துவக்கிவைக்கிறார்!

karunanidhi

திருச்சி தி.மு.க., 10வது மாநில மாநாட்டில், மொபைல் போன் இலவச தகவல் சேவை அளிக்கும் திட்டத்தை, அக்கட்சி தலைவர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார்.

மாநாடுக்கு, 10 லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் இச்சேவையை பெற, பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இச்சேவையை பெற விரும்புபவர்கள், தங்களது மொபைல் போனிலிருந்து, dmk என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டு, 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அந்த மொபைல் போன் எண்ணுக்கு தி.மு.க.,வின் அன்றாட செய்திகள், கட்சித்தலைவர் கருணாநிதியின் அறிக்கை, பேட்டிகள் குறுந்தகவல்களாக (எஸ்.எம்.எஸ்.,) அனுப்பப்படும்.

இலவச எஸ்.எம்.எஸ்., சேவை திட்டத்தில் தகவல் பெற, இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்துள்ளனர்.  இந்த எண்ணிக்கை நடைபெற இருக்கிற திமுக மாநாட்டையொட்டி இன்னும் அதிகரிக்கும் என திமுக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு