O Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with o letter.
Total Names: 391
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஒலியலழகி
(female)
நாதமும் அழகும் இணைந்த பெண்
-
ஒலியழகன்
(male)
சொல்லழகும் குரல் வளமும் மிக்கவன்
-
ஒலியாற்றல்
(male)
சொல்வன்மையும் வலிமையும் உடையவர்/ சொல்வன்மையால் வலிமை பெற்றவர்/சொல்வன்மையால் வெற்றி பெற்றவர்
-
ஒலியாளன்
(male)
ஓசையை ஆள்பவன்
-
ஒலியாழி
(male)
சொல்வன்மையில் கடல் போன்றவர்/சொல்வன்மையும் கடல் போன்று பரந்த உள்ளமும் உடையவர்
-
ஒலியினியன்
(male)
இனிய ஓசையைப் போன்றவன்
-
ஒலியுருவன்
(male)
பேச்சிலும் வடிவிலும் உயர்ந்தவர்
-
ஒலியெரி
(male)
சொல்வன்மையால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
ஒலியேந்தி
(male)
ஓசையை உடையவன்
-
ஒலியையன்
(male)
சொல்வன்மை நிறைந்த தலைவர்/ சொல்வன்மை நிறைந்த அரசர் போன்றவர்/சொல்வன்மையால் உயர்ந்தவர்
-
ஒலிவண்ணன்
(male)
சிறந்த ஓசையைப் போன்றவன்
-
ஒலிவல்லி
(female)
திறமை மிக்க, வலிமையான பெண்
-
ஒலிவளை
(female)
மனதை ஈர்க்கும் நயமிகு தோற்றத்தினை உடையவர்.
-
ஒலிவாணன்
(male)
சொல்வன்மையால் நல்வாழ்வு வாழ்பவர்
-
ஒலிவாணி
(female)
சரஸ்வதி தேவி, இசை மற்றும் கல்விக்கு அதிபதியானவள்
-
ஒலிவெற்பன்
(male)
ஓசையையுடைய குறிஞ்சி நிலத் தலைவன்
-
ஒலிவைகை
(male)
சொல்வன்மையும் வைகை ஆறு போன்று பிறர்க்கு உதவும் நற்குணமும் உடையவர்/சொல்வன்மையில் வைகை ஆறு போன்றவர்
-
ஒல்லையூர்க்கிழார்
(male)
சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சிற்றரசர் / ஊர்த்தலைவர்
-
ஒளவை
(female)
அறிவுக்கூர்மை கொண்டவள்
-
ஒளவையார்
(female)
கம்பீரமானவள், வளமான வாழ்க்கைக்கு உரியவள்
-
ஒளிஎழிலன்
(male)
ஒளியினால் உண்டாகும் அழகுடையவன்; ஒளிரும் அழகுடையவன்
-
ஒளிஎழிலி
(female)
ஒளிரும் அழகு உடையவர்
-
ஒளிக்கடல்
(male)
பெருமையில் கடல் போன்றவர்/கடல் போன்று புகழ் நிறைந்தவர்/ஞானத்தில் கடல் போன்றவர்
-
ஒளிக்கணை
(male)
கரும்பு போன்ற இனிமையான நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர் /மூங்கில் போன்று உறுதியால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஞானமும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/ஞானமும் மூங்கில் உறுதியும் உடையவர்
-
ஒளிக்கண்ணி
(female)
பொலிவுடன் திகழ்பவர் , / கருணையுடன் ஒளி பொருந்தியவராக இருப்பவர்
-
ஒளிக்கண்ணு
(male)
ஒளி பொருந்திய கண்களை உடையவன்
-
ஒளிக்கதிர்
(male)
ஒளியை உடைய கதிரவன்
-
ஒளிக்கரை
(male)
பெருமையும் சொல்வன்மையும் உடையவர்/ சொல்வன்மையால் வெற்றி பெற்றவர்/ஞானமும் சொல்வன்மையும் உடையவர்
-
ஒளிக்குன்றன்
(male)
மலை போன்று வலிமையால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஞானத்தில் மலை போன்றவர்
-
ஒளிக்குமரன்
(male)
புகழுடைய இளைஞன்
-
ஒளிக்குரிசில்
(male)
பெருமையாலும் புகழாலும் சிறந்து விளங்குபவர்/ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஒளிக்குளத்தன்
(male)
புகழுடைய குளத்தைச் சேர்ந்தவன்
-
ஒளிக்கொடி
(female)
பிரகாசத்தின் வெளிப்பாடு, ஒளியைப் போன்று உயர்வையும் நன்மையையும் உலகுக்கு எடுத்துச் சொல்பவர்.
-
ஒளிக்கொன்றை
(male)
ஒளி பொருந்திய கொன்றை போன்றவன்
-
ஒளிக்கோ
(male)
பெருமையாலும் புகழாலும் சிறந்து விளங்குபவர்/ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஒளிக்கோடன்
(male)
ஒளி போன்ற பிரகாசமான, புகழ்பெற்ற குணங்களைக் கொண்டவர்
-
ஒளிக்கோன்
(male)
பெருமையும் புகழும் நிறைந்த அரசர் போன்றவர்/பெருமையும் புகழும் நிறைந்த தலைவர்/ஞானம் நிறைந்த தலைவர்
-
ஒளிக்கோமான்
(male)
பெருமையாலும் புகழாலும் சிறந்து விளங்குபவர்/ஞானத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஒளிக்கோவன்
(male)
புகழுக்குரிய அரசன்
-
ஒளிச்சாரல்
(male)
அறிவும் அழகும் பரப்புபவர்
-
ஒளிச்சுடரோன்
(male)
ஒளியை உடைய கதிரவன்
-
ஒளிச்சுடர்
(female)
பெருமையாலும் புகழாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்/ ஞானத்தில் சூரியன் போன்றவர்
-
ஒளிச்சுடர்
(male)
பெருமையாலும் புகழாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்/ ஞானத்தில் சூரியன் போன்றவர்
-
ஒளிச்சுனையான்
(male)
மலையூற்றுப் போன்று பிறருக்குப் பயன்படுவதால் பெருமையும் புகழும் பெற்றவர் / ஞானத்தில் மலையூற்றுப் போன்றவர்
-
ஒளிச்சென்னி
(male)
புகழுக்குரிய சோழ அரசன்
-
ஒளிச்செம்மல்
(male)
ஒளி போன்ற பெருமையிற் சிறந்தோன்.
-
ஒளிச்செல்வி
(female)
அறிவும் நற்குணமும் நிறைந்தவள்
-
ஒளிச்செழியன்
(male)
பாண்டியன் போன்று பெருமையும் புகழும் உடையவர்/ஞானமும் பாண்டியன் போன்று பெருமையும் உடையவர்
-
ஒளிச்சேந்தன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்/ ஞானத்தில் முருகன் போன்றவர்
-
ஒளிச்சேய்
(male)
புகழுக்குரிய இளைஞன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
